ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் மூன்றாவது வரம் ,(Sree Saraswathi Thyagaraja College) நான் படித்த கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் (alumni meet) சந்திப்பு விழா நடைபெறும். அதில் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பணிக்கு செல்பவர்கள்,சுயதொழில் செய்பவர்கள் என அனைவருடைய (profiles) சுயவிவரங்களை சேகரித்து , அதில் யார் (higher position)உயர் பதவி வகிக்கிரார்களோ அவரளுக்கு கல்லூரி ஒரு விருதினை வழங்கி சிறப்பிக்கும்.(OUTSTANDING ALUMNI AWARD).
இந்நிலையில் கடந்த 15.12.2013 அன்று நடைபெற்ற விழாவில் சிறந்த முன்னால் மாணவருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டது.(OUTSTANDING ALUMNI AWARD 2013)

கண்களில் ஆனந்த கண்ணீரையும்,மனதில் உலகில் இனி சாதிக்க வேறொன்றும் இல்லை என்ற பேரின்பத்தையும் கொண்டு, விழாவில் கலந்துகொண்ட சக மாணவ நண்பர்கள்,ஆசிரியர்கள் கரஒலி எழுப்ப அம்மா ,அப்பா இருவருடனும் மேடையில் எனது கல்லூரியின் DIRECTOR GENERAL: Mr.M.SETTU, B.Com, MBA., FELLOW (AIMA), SECRETARY :
LION M.A.VIJAYA MOGHAN B.A. மற்றும் PRINCIPAL
Dr.V.VENKATESWARAN, M.Sc.,M.Phi.,Ph.D., F.C.R.S.I., இவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டேன்.....
இந்த விருதினை பெற நான் பட்ட கஷ்டங்களை விட, எனக்காக கஷ்டப்பட்ட நல்ல உள்ளங்களுக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்...